நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

‘பி‘ வகுப்பு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் மாற்றத்திற்கான நிபந்தனைகளில் தளர்வு: அந்தோனி லோக் தகவல்

புத்ரா ஜெயா: 

மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான ‘பி1‘ மற்றும் ‘பி2‘ வகுப்பு ஓட்டுநர் உரிமம் ‘பி‘ பிரிவுக்கு மாற்றுவதற்கான சிறப்புத் திட்ட நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் தகுதியை இழந்த தரப்பினர் எழுப்பிய மனக்குமுறல்ளின் எதிரொலியாக இந்த நிபந்தனைத் தளர்வு நேற்று உடனடியாக அமல்படுத்தப்பட்டது என்று போக்குவரத்து அவர் தெரிவித்தார். 

மோட்டார் சைக்கிள்களுக்கான பி உரிமம்ம் பெற விரும்புவோர் பி1 மற்றும் பி2 உரிமத்தைக் குறைந்தது பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக புதுப்பித்து வைத்திருக்க வேண்டும் என்பது அந்த நிபந்தனைகளில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார். 

இவ்விவகாரம் தொடர்பில் பொது மக்களின் கருத்துகளைக் கவனத்தில் கொண்டு போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ எடி ஃபாட்லி ரம்லியுடன் விவாதித்து நிபந்தனைகளைத் தளர்த்தும் முடிவுகளைத் தாங்கள் எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இதன் வழி பி வகுப்பு உரிமம் பெறுவதற்கு மோட்டார் சைக்கிளோட்டும் லைசென்ஸ்களை பத்து ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் வைத்திருந்தால் போதுமானது. 

முன்பு அறிவிக்கப்பட்டதைத் போல் தொடர்ச்சியாக புதுப்பித்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றார் அவர்.

கடந்த 2020-ஆம் ஆண்டு கோவிட்-19 காரணமாக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் வாகனமோட்டும் உரிமங்களைப் புதுப்பிக்க இயலாத சூழல் நிலவியதால் இந்த நிபந்தனை நியாயமற்றது என பொது மக்கள் கூறியிருந்தனர் என அவர் குறிப்பிட்டார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது வாகன லைசென்ஸ்கள் புதுப்பிப்பதிலிருந்து அனைத்து வாகனமோட்டிகளுக்கும் அரசாங்கம் விதி விலக்களித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset