நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினராக சைட் ஹுசைன் பதவியேற்றார்

இஸ்கண்டார் புத்ரி:

மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினராக சைட் ஹுசைன் இன்றூ பதவியேற்று கொண்டார்.

15ஆவதி ஜொகூர் மாநில சட்டமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் இன்று கோத்தா இஸ்கண்டாரில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சைட் ஹுசைன் மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

சட்டமன்ற சபாநாயகர் டத்தோ டாக்டர் முகமட் புவாட் சர்காஷி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து, பதவிப் பிரமாணத்திலும் கையெழுத்திட்டார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மக்கோத்தா சட்டமன்ற தேர்தலில் சைட் ஹுசைன் 20,648 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset