நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வருங்கால சவால்களுக்கு ஏற்ப அடுத்த தலைமுறையை உருவாக்கும் கடமை ஆசிரியப் பெருந்தகையினருக்கு உண்டு: டத்தோஶ்ரீ சரவணன்

கிள்ளான்:

வருங்கால சவால்களுக்கு ஏற்ப அடுத்த தலைமுறையை உருவாக்கும் கடமை  ஆசிரியப் பெருந்தகையினருக்கு உண்டு.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் இதனை வலியுறுத்தினார்.

கோவிட்-19 தொற்று உலகளாவிய நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அத்தொற்று நோய் வரவில்லை என்றால் வீட்டில் இருந்து படிப்பது, வேலை செய்வது போன்றவை நமக்கு தெரியாமல் இருந்திருக்கும்.

அதே வேளையில் இனி வரும் காலங்களில் பல்வேறு மாற்றங்களைத் தொழில் ரீதியாகவும், இயற்கை வளங்களிலும், வாழ்க்கைச் சூழலிலும் நாம் எதிர்நோக்குவோம்  என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

அதற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை உருவாக்கும் கடமை ஆசிரியப் பெருந்தகையினருக்கு உண்டு.

மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் மாநாட்டில் உரையாற்றிய டத்தோஶ்ரீ சரவணன் இதனை கூறினார்.

ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே. அந்தக் கல்வியை வழங்கும் ஆசிரியர்கள் போற்றுதலுக்குரியவர்கள். 

அவ்வகையில் மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் மாநாட்டிற்குத் தலைமை தாங்கியதில் மகிழ்ச்சி. 

தலைமையாசிரியர் எஸ்எஸ் பாண்டியன் இக்கழகத்தின் தலைவராக பொறுப்பு வகிப்பதுடன் சிறந்த சேவையையும் செய்து வருகிறார்.

அவருக்கு எனது பாராட்டுகள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset