
செய்திகள் மலேசியா
ஊடகவியலாளர்களுக்கான சம்பள பாக்கியை விரைந்து வழங்குக: ஃபஹ்மி ஃபாட்சில்
கோலாலம்பூர்:
ஊடகவியலாளர்களுக்கான சம்பள பாக்கியை விரைந்து வழங்கும்படி ஊடக நிறுவனங்களுக்குத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கேட்டுக் கொண்டார்.
பல மாதங்களாக ஊடகவியலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு சம்பள நிலுவைத் தொகையை வழங்க கடமைப்பட்டுள்ளது என்றார் அவர்.
முன்னதாக, மலேசியப் பத்திரிகையாளர்களின் தேசிய ஒன்றியம் (NUJM) மற்றும் Gerakan Media Merdeka (GERAMM) ஆகியவை ஊடகப் பயிற்சியாளர்களான The Malaysian Insight மற்றும் The Vibes நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிகளிடம் பல மாதங்களாக செலுத்தப்படாத சம்பள பாக்கிகளை உடனடியாகத் தீர்க்குமாறு வலியுறுத்தின.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:51 am
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார்
May 9, 2025, 10:22 am