செய்திகள் மலேசியா
3-ஆவது முறையாக நம்பிக்கை நட்சத்திர விருதுகள் 2024
கோலாலம்பூர்:
1997-ஆம் ஆண்டு மாத இதழாகத் தமது பயணத்தைத் தொடங்கிய நம்பிக்கை குழுமம், 2021-ஆம் ஆண்டில் இணைய ஊடகத் துறையில் கால் பதித்தது.
2022-ஆம் ஆண்டு முதல் முறையாக நம்பிக்கை விருதுகளை அறிமுகப்படுத்தி 27 பெருந்தகைகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தது.
அதனைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட 2-ஆவது விருது விழாவில் 32 பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தற்போது 3-ஆவது முறையாக, நம்பிக்கை நட்சத்திர விருதுகள் 2024 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 40 பேருக்கு விருதுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொழி, கலை, இலக்கியம், தொழில்துறை சார்ந்த விருதுகளும் இதில் அடங்கும். இம்முறை கலைத் துறையில் 13 விருதுகள், சமூக ஊடகக் கலைஞர்களுக்கு 10 விருதுகளும் வழங்கப்படும்.
இந்த விருது விழா நவம்பர் 30-ஆம் தேதி, சனிக்கிழமை, கோலாலம்பூர், டேவான் துன் ரசாக், பேங்க் ரக்யாட் மாநாட்டு மண்டபத்தில், இரவு 7 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கும்.
மலேசியாவின் முதன்மை செய்தி ஊடகமாக வலம் வரும் நம்பிக்கை, திறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் நோக்கத்துடன் இடைவிடாமல் இந்த விருது விழாவை நடத்துவதாக நம்பிக்கை குழுமத்தின் தோற்றுநர் தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மது இக்பால் இராவுத்தர் தெரிவித்தார். சமூகம் சார்ந்த சிறப்பு விருதுகள் நீதிபதிகள் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் அக் குழுவிற்கு டத்தோஶ்ரீ இக்பால் தலைமையேற்றுள்ளார்.
இதில் கலை, சமூக ஊடகம் சார்ந்த இருபத்து மூன்று(23) விருதுகளும் பத்து(10) நாட்கள் நடக்கவிருக்கும் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்.
ஒவ்வொரு பிரிவுகளில் ஐந்து(05) பேர் வேட்பாளர்களாகவும், அவர்களில் மக்களின் மகத்தான ஆதரவை பெற்று அதிக வாக்குகளை பெற்ற நபர் சம்பந்தப்பட்ட விருதினைச் தட்டிச் செல்வார்.
மேலும், "மலேசிய மாமனிதர்" துன் சாமிவேலு வாழ்நாள் சாதனையாளர் விருதும், கலைத் துறை வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட உள்ளன.
சிவப்பு கம்பள வரவேற்புடன் நிகழ்ச்சி தொடங்கும். கலைஞர்கள், பிரமுகர்கள், வருகையாளர்கள் என 500 பேர் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த விருது விழா குறித்த அனைத்து தகவல்களுக்கும் Nambikkai Online சமூக ஊடகங்களை வலம் வரலாம்.
அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றவர்கள் மட்டுமே இந்த விருது விழாவில் கலந்து சிறப்பிக்க முடியும்.
இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு, நம்பிக்கை செயலகத்தை (016-9305786) தொடர்பு கொள்ளலாம்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 21, 2024, 5:59 pm
ரோஸ்மா விவகாரத்தில் நான் தலையிடவில்லை: பிரதமர்
December 21, 2024, 5:17 pm
செயற்கை நுண்ணறிவு உலகை ஆளப் போகிறது; கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம்: டத்தோஸ்ரீ சரவணன்
December 21, 2024, 4:51 pm
2025ல் பி40 மக்களின் மேம்பாட்டில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் முழு கவனம் செலுத்தும்: சுரேன் கந்தா
December 21, 2024, 4:44 pm
பிரபோவோ சுபியாடோவையும், தக்சின் ஷினாவத்ராவையும் பிரதமர் லங்காவியில் சந்திக்கிறார்
December 21, 2024, 2:37 pm
மியான்மாரில் அமைதியை மீட்டெடுக்க மலேசியா துணை நிற்கும்: முஹம்மத் ஹசன்
December 21, 2024, 2:28 pm
இந்திய சமுதாயத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை இன ரீதியிலான சர்ச்சையாக மாற்ற வேண்டாம்: டத்தோஸ்ரீ அன்வார்
December 21, 2024, 12:22 pm