நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் மீது 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசிய ஈரான்: போர் பதற்றம் அதிகரிப்பு

ஜெருசலம்:

இஸ்ரேல் மீது 400க்கும் மேற்பட்ட  ஏவுகணைகளை  ஈரான் வீசியுள்ளது.

இதனைத் தொடர்ந்தி நாடுகளுக்கு இடையே  போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி நேற்று இரவு தாக்குதல் நடத்தியது.

ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மரணத்திற்கு பழிவாங்கவே இந்த தாக்குதலை துவங்கியதாக ஈரான் அறிவித்துள்ளது.

இதற்கு பதில் அளித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியருப்பதாவது:

ஈரான் பெரும் தவறை செய்து விட்டது. தவறுக்கான விலையை ஈரான் கொடுத்தே ஆக வேண்டும். இஸ்ரேலின் வான் பாதுகாப்பு சிறப்பாக இருந்ததால், ஈரான் முயற்சி தோல்வி அடைந்தது என்று பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset