
செய்திகள் மலேசியா
மகளை பல்கலைக்கழகத்தில் சேர்க்கும் தந்தையின் கனவு நிறைவேறியது
கோலாலம்பூர்:
மகளை பல்கலைக்கழகத்தில் சேர்க்கும் தந்தையின் கனவு மக்களின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது.
67 வயதுடைய எம். சின்னகருப்பன் தனது மகள் கலைமகளை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார்.
கலைமகள் கிளந்தான் மலேசய பல்கலைக்கழகத்தின் உயர் கல்வியை தொடரவுள்ளார்.
ஆனால் அவருக்கான நுழைவுக் கட்டணமாக 3 ஆயிரம் ரிங்கிட்டை செலுத்துவதற்கு பணம் இல்லை.
இதன் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சின்னகருப்பன் சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களின் உதவியை நாடினார்.
அவரின் பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து கிட்டத்தட்ட 2 மணி நேரத்தில் அவருக்கு தேவையான பணம் கிடைத்துள்ளது.
இதன் வாயிலாக கலைமகள் தற்போது உயர் கல்வியை தொடரவுள்ளார்.
அதே வேளையில் உதவிய அனைவருக்கும் சின்னகருப்பன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 1:47 pm
தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; 100 அணிகள் பங்கேற்றுள்ளன: பத்துமலை
July 12, 2025, 12:18 pm
மலாக்காவில் ரிக்ஷா சேவைக்கு இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்
July 12, 2025, 11:28 am
இணைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
July 12, 2025, 10:52 am