நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதிமன்ற உத்தரவுகளை பொருட்படுத்தாமல் குப்பை சேகரித்து வந்த 69 வயது பெண்ணின் பிடிவாதம்

ஈப்போ: 

கடந்த 10 ஆண்டுகளில் ஆறு முறை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள், மூன்று முறை நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்ட போதிலும், இங்குள்ள தனது வீட்டில் குப்பைகளைத் தொடர்ந்து சேகரிப்பதை ஒரு முதிய பெண் நிறுத்தவில்லை. இதன் காரணமாக, ஈப்போ மாநகராட்சி (MBI) நேற்று தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

69 வயதான அந்த பெண் தொடர்ந்து தன் வீட்டின் முன்புறம் மறுசுழற்சி பொருட்கள், குப்பைகள் ஆகியவற்றைச் சேகரித்து வந்தது  அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆதலால், பொது மக்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த சுத்தம் செய்யும் நடவடிக்கை மீண்டும் மேற்கொள்ளப்பட்டதாக MBI வெளியிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

“2016 முதல் இதுவரை, அந்த இடத்தில் ஆறு முறை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதோடு, அபராதத் தண்டனைகள், நீதிமன்ற உத்தரவுகள் அடங்கிய மூன்று நீதிமன்ற நடவடிக்கைகளையும் அந்த வீட்டின் உரிமையாளர் எதிர்கொண்டுள்ளார்.

“இந்த வீட்டின் நிலைமை சுற்றுப்புறத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, கொசு, கரப்பான் பூச்சி, எலி போன்ற நோய் பரப்பும் உயிரினங்கள் பெருகுவதற்கும் காரணமாக இருக்கலாம்,” என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

 இந்த நடவடிக்கை சமூக நலத் துறை (JKM), மலேசிய அரச காவல்துறை (PDRM), MBI ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டதாக MBI அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“ஏழு டன் கொள்ளளவு கொண்ட ஐந்து லாரிகள், ஒரு 'ஜெங்காவுட்' இயந்திரம் உட்பட  27 சுத்தம் செய்யும் பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

“பிளாஸ்டிக், காகிதம், இரும்பு, கட்டை போன்ற பொருட்கள் முழுமையாக அகற்றப்பட்டன.

“எந்தவித எதிர்பாராத சம்பவங்களும் இன்றி, இந்த நடவடிக்கை மூன்று மணி நேரத்திற்குள் வெற்றிகரமாக நிறைவடைந்தது,” என அந்த அறிக்கை தெரிவித்தது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset