நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

TVET பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதம் 95 சதவீதத்தைத் தாண்டியது: ஜாஹித்

கோலாலம்பூர்: 

தொழில்நுட்ப, தொழில் பயிற்சி கல்வி (TVET) பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதம் 2024 ஆம் ஆண்டில் 95 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று துணைப் பிரதமர் டத்துக் ஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.

வேலைவாய்ப்பு விகிதம் பொறியியல், உற்பத்தி மற்றும் கட்டுமானம், தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம், வணிகம், நிர்வாகம், சட்டம், இலக்கியம், மனிதவியல், சேவைத் துறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும் என துணைப் பிரதமர் கூறியுள்ளார்.

 இந்தச் சதவீதம் மலேசியத் தொழில்நுட்ப பல்கலைக்கழக வலையமைப்பு (MTUN) பட்டதாரிகளை உள்ளடக்கவில்லை என்றும்  கிராமப்புற, பிராந்திய மேம்பாட்டு அமைச்சரான  அவர் தெரிவித்தார்.

மேலும், TVET தரவுத் தொகுப்பின் (Big Data) அடிப்படையில், 2020 முதல் 2024 வரை பொறியியல் துறை 21 முதல் 23 சதவீதம் வரை பதிவுசெய்து, TVET பாடநெறிகளில் முதன்மை துறையாக தொடர்ந்து திகழ்கிறது என்றும் அவர் கூறினார்.

“இதனைத் தொடர்ந்து கட்டுமானத் துறை 15 முதல் 17 சதவீதம் வரைவும், தகவல் தொழில்நுட்பத் துறை 7 முதல் 9 சதவீதம் வரைவும் உள்ளது.

“வாகன தொழில் (ஆட்டோமொட்டிவ்), விருந்தோம்பல் (ஹாஸ்பிடாலிட்டி), விவசாயம் ஆகிய துறைகள் குறைந்த சதவீதத்தை பதிவு செய்துள்ளன. மற்ற பிரிவுகள் பல்வேறு தொழில் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல கல்வித் துறைகளை உள்ளடக்கியுள்ளன.

 வங்சா மாஜூ தொகுதியைச் சேர்ந்த ஜாஹிர் ஹசன் (PH) எழுப்பிய கேள்விக்கு, நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் அவர் இந்த விவரங்களை வழங்கினார்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset