நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொம்மை கடையில் தீ விபத்து: சுமார் RM 1 மில்லியன் இழப்பு

கோலா திரங்கானு:

கம்போங் சிம்பாங் டோக் குவில் பகுதியில் உள்ள பொம்மைகள், சைக்கிள்கள், மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் இழப்பு தொகை சுமார் ஒரு மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மாலை 7.40 மணியளவில் ஏற்பட்ட தீயில், காலை முதல் விற்பனை செய்யப்பட்ட 10,000 ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட பணமும் எரிந்து நாசமானது. கடையின் மேலாளர் மாயா சுஹைதி (40), சம்பவ நேரத்தில் ஊழியர்களுடன் இரு மாடி கட்டிடத்தில் இருந்தபோது, கடையின் பின்புறம் புகை வாசனை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

அவர் உடனடியாக தீயணைப்புத் துறையை அழைத்து, ஊழியர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினார். வெளிப்புறத்தில் இருந்த சில பொருட்களையே மீட்க முடிந்ததாகவும், உள்ளே இருந்த விற்பனைப் பொருட்களும் நாள் முழுவதும் கிடைத்த பணமும் முழுமையாக எரிந்துவிட்டதாகவும் கூறினார்.

இந்த கடையை ஐந்து ஆண்டுகளாக நடத்தி வரும் உரிமையாளர் முகமது அஸ்ரோல் அசாஹார் (39) அந்த நேரத்தில் கோலா பெராங்கில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. தீ விபத்தில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்களுக்கான சைக்கிள்கள், பொம்மைகள், 10-க்கும் மேற்பட்ட பெரியவர்களுக்கான மின்சார ஸ்கூட்டர்கள், பள்ளி உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்தன.

இதற்கிடையில், கோலா திரங்கானு தீயணைப்பு மீட்பு நிலையத் தலைவர் தோயிபா தைப், அவசர அழைப்பு கிடைத்தவுடன் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றதாக கூறினார். தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தீ விபத்துக்கான காரணமும் இறுதி இழப்பு தொகையைக் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset