நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய RON95 பெட்ரொலை வாங்கும் வெளிநாட்டு வாகனமோட்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்

ஜோகூர்பாரு:

வெளிநாடுகளில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களை வைத்திருப்போர் மலேசியாவின் RON95 பெட்ரொலை வாங்கினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கக்கூடும். அதோடு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சலுகை விலையில் வழங்கப்படும் பெட்ரொலின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை அறிமுகம் செய்கிறது.

அவை ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வரும் என்று நாடுளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின் கீழ் வாகன உரிமையாளர் மீதும் எரிசக்தி நிலையம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.

வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு சலுகை பெட்ரொலை விற்பனை செய்யும் பெட்ரோல் நிலையங்கள் மீது  தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மலேசிய RON95 பெட்ரொலை வாங்கும் வெளிநாட்டு வாகனமோட்டிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset