செய்திகள் மலேசியா
தப்பிக்க முயன்ற 218 வெளிநாட்டவர்கள் ட்ரோன் உதவியுடன் அதிரடி கைது
கோலாலம்பூர்:
செராஸ் பகுதியில் உள்ள தாமன் எமாஸ் வணிக வளாகங்களிலும் கடை வீடுகளிலும் நடைபெற்ற “ஓப்ஸ் சாப்பு பெர்செபாடு” நடவடிக்கையில் குடிநுழைவுத் துறை 218 வெளிநாட்டவர்களை கைது செய்துள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்ற இந்த நடவடிக்கையில் மொத்தம் 1,087 பேர் சோதனை செய்யப்பட்டனர்.
இரண்டு வார ரகசிய கண்காணிப்பும், பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குடிவரவு துறை துணை இயக்குநர் டத்தோ லோக்மான் எஃபெண்டி ரம்லி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 166 ஆண்களும் 52 பெண்களும், இரண்டு குழந்தைகளும் உள்ளடங்குவர். இவர்களின் வயது இரண்டு முதல் 53 வரை ஆகும்.
கைது செய்யப்பட்டவர்களில் இந்தோனேசியர்கள் 44 பேர், வங்காளதேச நாட்டவர் 56, இந்தியர்கள் 5, மியான்மார் 78, நேபாளம் 10, இலங்கை 4, நைஜீரியா 12, பிற நாடுகளைச் சேர்ந்த ஏழு பேர் அடங்குகின்றனர். செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமை, காலாவதி விசாவில் தங்குதல், வேலை அனுமதி விதிகளை மீறுதல் போன்ற குற்றங்கள் கண்டறியப்பட்டன.
நடவடிக்கையின் போது சிலர் தப்ப முயன்றதுடன், கட்டிடங்களின் மேல் கூரைகளில் மறைந்தனர். ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதன் மூலம், கூரைகளில் மறைந்திருந்த சுமார் 15 பேரை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சட்டவிரோதமாக தங்கும் வெளிநாட்டவர்களை வேலைக்கு எடுக்க வேண்டாம் என முதலாளிகளுக்கு லோக்மான் எச்சரிக்கை விடுத்தார். இந்த நடவடிக்கையில் 279 குடிவரவு அதிகாரிகளும், தேசிய பதிவு துறையின் 10 அதிகாரிகளும் பங்கேற்றனர்.
நேற்று வரை 1,069 அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 17,793 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 3,691 சட்டவிரோத குடியேறிகள், 110 முதலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குடிநுழைவுச் சட்டங்களும் மனிதக் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
January 30, 2026, 5:34 pm
மலேசிய RON95 பெட்ரொலை வாங்கும் வெளிநாட்டு வாகனமோட்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்
January 30, 2026, 4:03 pm
சமயத்தை சச்சரவுக்கான கருவியாக மாற்ற வேண்டாம்: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன்
January 30, 2026, 2:48 pm
TVET பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதம் 95 சதவீதத்தைத் தாண்டியது: ஜாஹித்
January 30, 2026, 12:26 pm
கிள்ளான் பகுதியில் தீயணைப்பு வீரர்களின் உடனடி நடவடிக்கை: சாலை விபத்து தவிர்க்கப்பட்டது
January 30, 2026, 12:20 pm
பொம்மை கடையில் தீ விபத்து: சுமார் RM 1 மில்லியன் இழப்பு
January 30, 2026, 11:50 am
நீதிமன்ற உத்தரவுகளை பொருட்படுத்தாமல் குப்பை சேகரித்து வந்த 69 வயது பெண்ணின் பிடிவாதம்
January 29, 2026, 11:05 pm
மனிதக் கடத்தல் வலையில் சிக்கிய 57 சிறுவர்கள் உட்பட 138 பேர் மீட்பு: டத்தோ குமார்
January 29, 2026, 9:18 pm
நெகிரி செம்பிலானில் அதிரடி நடவடிக்கை: கட்டுமானத் தளத்தில் 30 வெளிநாட்டவர் கைது
January 29, 2026, 7:00 pm
