நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிள்ளான் பகுதியில் தீயணைப்பு வீரர்களின் உடனடி நடவடிக்கை: சாலை விபத்து தவிர்க்கப்பட்டது 

கிள்ளான்:

காப்பார் தீயணைப்பு மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள், இன்று அதிகாலை பூத்தொட்டி உடைந்து அதன் மண் சாலையோரம் சிதறிய சம்பவத்தை உடனடியாக சுத்தம் செய்து, சாலை பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.

அதிகாலை 2.28 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சுமார் 17 நிமிடங்களில் தீயணைப்புக் குழு சம்பவ இடத்தை அடைந்தது. ஆய்வில், ஒரு வாகனம் மோதியதால் பூத்தொட்டியின் மண் சுமார் 15 மீட்டர் நீளத்திற்கு சாலையின் ஓரப்பகுதியில் பரவி இருந்தது தெரியவந்தது.

நடவடிக்கைத் தலைவர் பிபிகே ஐ அஹ்மத் ஃபுவாட் நசாருதீன் ஜோஹாரி தலைமையில், ஐந்து பேர் கொண்ட குழு சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு அந்த பகுதியை முழுமையாக பாதுகாப்பானதாக மாற்றினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சிலாங்கூர் மாநில செயல்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையில், நடவடிக்கை சீராக நடைபெற்றதாகவும், தீயணைப்பு வீரர்களது விரைவான செயல்பாடு சாலை விபத்தின் அபாயத்தைத் தவிர்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset