நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமயத்தை சச்சரவுக்கான கருவியாக மாற்ற வேண்டாம்: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன்

கோலாலம்பூர்:

மதத்தை சமூகத்தில் சச்சரவுகளுக்கான கருவியாக மாற்ற வேண்டாம் என தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன்  மலேசிய மக்களிடம் கேட்டுக்கொண்டார். 

குறிப்பாக சமூக ஊடகங்களில் வெறுப்புகளையோ அல்லது கோபத்தை தூண்டும் செயல்களை தவிர்த்து, நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்க ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தைப்பூசம் திருநாளை முன்னிட்டு இன்று தனது முகநூல் பதிவில், “அமைதியான, செழிப்பான, ஒன்றுபட்ட மலேசியாவுக்காக ஒற்றுமை மனங்களில் மலர வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

மேலும், மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையும் புரிதலும் ஒரு நாட்டின் நிலைத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமாக இருப்பதாகவும், இந்த பல்வகைமையில்தான் மலேசியாவின் வலிமை உள்ளது என்றும் அவர் கூறினார்.

அதே பதிவில், இந்து சமூகத்தினருக்கு தைப்பூசம் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன், அந்த விழா அனைவருக்கும் ஆசீர்வாதத்தை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset