செய்திகள் உலகம்
தாய்லாந்து பள்ளிப் பேருந்தில் தீப்பிடித்து: 25 பேர் மரணம்
பேங்காக்:
தாய்லாந்தில் பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
அந்தப் பேருந்தில் மாணவர்களும் ஆசிரியர்களுமாக 44 பேர் பயணம் செய்ததாகத் தகவல் வெளியானது.
நேற்று நிகழ்ந்த அந்தத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எத்தனை பேர் என்று சரியாகத் தெரியாத நிலையில் தீயை அணைத்த பிறகு, 25 பேர் மாண்டிருக்கலாம் என கருதப்படுவதாகத் தாய்லாந்துப் போக்குவரத்து அமைச்சர் சூரியா ஜுங்ருங்ரீங்கிட் தெரிவித்தார்.
பேருந்தில் 38 மாணவர்களும் ஆறு ஆசிரியர்களும் இருந்ததாக முதலில் வந்த தகவல் தெரிவித்தது.
அவர்களில் மூன்று ஆசிரியர்களும் 16 மாணவர்களும் மீட்கப்பட்டதால் எஞ்சிய 25 பேரும் மாண்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம் என்ற அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
யாரும் மீட்கப்படாமல் காணாமல் போயுள்ளார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, என்றும் அமைச்சர் கூறினார்.
பேருந்து எரிந்துகொண்டு இருந்தநிலையில் கரும்புகை வெளியேறியதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களிலும் உள்ளூர் செய்தித்தளங்களிலும் பதிவேற்றப்பட்டன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 4:07 pm
ஹார்முஸில் ஈரான் கப்பலை கைப்பற்றிய ‘யுஎஸ் மரைன்ஸ்’: பதிலடிக்கு தயாராகும் தெஹ்ரான்
April 20, 2026, 4:03 pm
அமெரிக்க போர்க் கப்பல் மலாக்கா நீரிணை வழியாகச் சென்றது
April 20, 2026, 10:38 am
புளோரிடாவில் விபத்துக்குள்ளான இலகுரக விமானம்
April 20, 2026, 10:21 am
போரின் விளைவு: வான்வழித் தாக்குதலால் முடங்கிய 20 விமானங்கள்
April 19, 2026, 6:57 pm
கியூபாவை கைப்பற்ற போவதாக டிரம்ப் மிரட்டல் பேச்சு: மெக்சிகோ, பிரேசில், ஸ்பெயின் கடும் கண்டனம்
April 19, 2026, 10:12 am
குவிந்து கிடந்த பச்சிளம் குழந்தைகளின் சடலங்கள்: குற்றச் செயல்களின் கூடாரமாகிறதா திரினிடாட்?
April 18, 2026, 2:16 pm
சர்வதேச அரங்கில் தீவிரமாக செயல்படும் பிரபோவோ சுபியாண்டோ
April 18, 2026, 11:42 am
