நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பச் செயல் திட்டத்தை 12 மாதங்களுக்குள் நிறைவு செய்ய இலக்கு: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

மலேசியா தனது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பச் செயல் திட்டத்தை அடுத்த 12 மாதங்களுக்குள் நிறைவு செய்ய இலக்கு கொண்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அந்தக் காலக்கெடுவிற்குள் முடிக்க இலக்கு வைக்கப்பட்ட பல முக்கியத் தொழில்நுட்பங்களில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில் அதை விரைவில் அடைய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

என்னைப் பொறுத்தவரை, 12 மாதங்கள் காத்திருக்க தேவையில்லை, அதை ஆறு மாதங்களில் முடிக்க முடியும் என்று அவர் கூகுள் மலேசியா நிகழ்வான மாந்தாப் மலேசியா பெர்சாமா AI இல் கூறினார்.

அந்நிகழ்ச்சியில் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் ஆகியோரும் உடன் இருந்தனர்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset