நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தான், திரெங்கானுவில் வெள்ளப் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது

கோத்தாபாரு:

கிழக்கு கடற்கரையில் இரண்டு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கிளந்தானில் இன்று காலை நிலவரப்படி 476 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

135 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் 7 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

இதுவரை தானா மேரா மாவட்டம் மட்டுமே இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

மற்ற இரண்டு மாவட்டங்களான கோலா கிராய், மாச்சாங் வெள்ளத்தில் இருந்து மீண்டுள்ளன என்று சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் பிரிவு கூறியது.

திரெங்கானுவில், பெசுட் மாவட்டம் மட்டும் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

உலு திரெங்கானுவில் 12 வெள்ள நிவாரண மையங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset