
செய்திகள் மலேசியா
இ.பி.எஃப். சேமிப்பு போதுமான அளவு இல்லாதிருப்பதற்கு சம்பளக் குறைவே காரணம்: முஹம்மத் ஜூக்கி அலி
கோலாலம்பூர்:
மலேசியாவில் காணப்படும் குறைவான சம்பளக் கட்டமைப்பு முறையே ஊழியர் சேம நிதி வாரியத்தில் (இ.பி.எஃப்.) உறுப்பினர்களின் சேமிப்பு போதுமான அளவு இல்லாதிருப்பதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
உறுப்பினர்கள் மத்தியில் குறிப்பாக அதிகாரபூர்வமற்ற பொருளாதார மற்றும் தற்காலிகாக பொருளார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களிடம் காணப்படும் காணப்படும் சீரற்ற முறையிலான இ.பி.எஃப். பங்களிப்பு இந்த சிக்கலை இன்னும் மோசாக்கியுள்ளதாக அந்த நிதி வாரியத்தின் தலைவர் டான்ஸ்ரீ முஹம்மத் ஜூக்கி அலி கூறினார்.
அதிகாரப்பூர்மற்ற தொழில்களின் பால் ஏற்பட்டுள்ள அபரிமித மாற்றம் காரணமாக இ.பி.எஃப். போன்ற ஓய்வுகாலச் சேமிப்புத் திட்டங்களில் பங்கேற்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இது மட்டுமின்றி நிதியை நிர்வாகம் செய்வதில் காணப்படும் போதிய திறன்மின்மை சேமிப்பு மற்றும் ஓய்வுகால திட்டமிடல் மீதான புரிதலை கட்டுப்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.
இன்று இங்கு நடைபெற்ற 2024 நிதி நிர்வாக விழிப்புணர்வு மாத நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm
பள்ளிக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆடவர் உயிர் தப்பினார்
July 1, 2025, 1:08 pm