நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மகளை நடிகையாக்கிப் பார்க்கும் VJ அர்ச்சனா; மளமளவென வளர்ந்து ஹீரோயினாக மாறிவரும் சாரா

சென்னை:

தொலைக்காட்சி தொகுப்பாளினி அர்ச்சனா சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் எனும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானார். அவரது மகள் தற்போது சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அர்ச்சனா இளமை புதுமை, கலக்கப்போவது யாரு, செலிபிரிட்டி கிச்சன், மிஸ்டர் மிஸஸ் சின்னத்திரை போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும் செம்பருத்தி, யாரடி நீ மோகினி, மற்றும் பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் அர்ச்சனாவிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதன் பிறகு இவர் கொஞ்சம் கொஞ்சமாக சேட்டை செய்ய ஆரம்பித்தார். இதனால் ரசிகர்களிடமிருந்து வரவேற்பு குறையத் தொடங்கியது. அதுவும் பிக்பாஸ் வீட்டில் அன்பு கேங் என்ற பெயரில் இவர் செய்த சேட்டை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.

vj archana zaara vineet
 
அர்ச்சனா அவரது மகள் சாரா இருவரும் டாக்டர் படத்தில் நடித்துள்ளனர். இப் படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனால் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

சாரா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் தனது படங்களை  பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset