நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செயற்கை நுண்ணறிவு மையமாக மலேசியாவை மாற்றுவதற்கான இலக்கை அரசாங்கம் கொண்டுள்ளது: பிரதமர்

கோலாலம்பூர்:

மலேசியாவை செயற்கை நுண்ணறிவு  மையமாக மாற்றவும், அடுத்த 12 மாதங்களுக்குள் அதற்கான தொழில்நுட்ப செயல் திட்டத்தை முடிக்கவும் அரசாங்கம் இலக்கு  கொண்டுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

போட்டி நிறைந்த உலகளாவியசெயற்கை நுண்ணறிவு  நிலப்பரப்பில் முன்முயற்சிகளை ஒருங்கிணைக்க தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகத்தையும் அரசாங்கம் நிறுவும்.

மலேசியாவின் திறனைப் பயன்படுத்துவதில் மூலோபாயக் கொள்கைத் தலையீடு முக்கியமானது.

மலேசியா முக்கியமான பங்காளிகளை பயன்படுத்திக் கொள்ளவும், ஆசியாவில்  செயற்கை நுண்ணறிவு உந்துதல் கொண்ட நாட்டை உருவாக்கவும் அரசு விரும்புகிறது.

2025 ஆம் ஆண்டு ஆசியான் தலைவர் பதவியை மலேசியா ஏற்கும் போது டிஜிட்டல் மயமாக்கல் மலேசியாவின் கவனம் செலுத்தும் பகுதியாக மாறியுள்ளது.

இதன் வாயிலாக மலேசியா பொருளாதார போட்டித்தன்மையை ஊக்குவிக்க விரும்புகிறது.

மலேசிய நிகழ்வுகளில் ஏஐ, கூகுள் நிகழ்வில் பேசிய பிரதமர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset