நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

VEP வாகன நுழைவு அனுமதி இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது

ஜொகூர் பாரு:

மலேசியாவுக்குச் செல்லும் வெளிநாட்டு வாகனங்களுக்கான VEP வாகன நுழைவு அனுமதி நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இதற்கு முன்னர் VEP அட்டை இல்லாதவர்களுக்கு அதிகபட்சம் சுமார் 620 வெள்ளி அபராதம் அல்லது 6 மாதம் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தது.

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி VEP அட்டை இல்லாத வாகன மோட்டிகளும் மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

VEP வாகன நுழைவு அனுமதி நடைமுறை கட்டங்கட்டமாகச் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.

VEP அட்டை இல்லாதவர்கள் RFID வில்லைகளுக்கு விண்ணப்பம் செய்து அவற்றைப் பொருத்துமாறு நினைவூட்டப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset