நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

10 ஆண்டுகளில் ஊழல் புலனாய்வு குறியீட்டின் பட்டியலில்  25-ஆவது இடத்திற்கு மலேசியா முன்னேறுவதை எம்ஏசிசி உறுதி செய்யும்: அசாம் பாக்கி

பெட்டாலிங் ஜெயா: 

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மலேசியா ஊழல் புலனாய்வு குறியீட்டின் (CPI) பட்டியலில் 25-ஆவது இடத்திற்கு முன்னேறுவதை எம்ஏசிசி உறுதி செய்யும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் தான்ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

இது எளிதானது அல்ல என்றாலும் மலேசியா அதற்கான முயற்சிகளை  ஒவ்வொரு ஆண்டும் திறம்படச் செய்து வருகின்றது என்றார் அவர். 

இந்த முயற்சியின் மூலம் மலேசியா இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

2023-ஆம் ஆண்டுக்கான  ஊழல் புலனாய்வு குறியீட்டின் புள்ளி பட்டியலில்  மலேசியா 57-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

அடுத்த 10 ஆண்டுகளில் ஊழல் புலனாய்வு குறியீட்டின் புள்ளி பட்டியலில் 25-ஆவது தரவரிசைக்கு முன்னேற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆசியான் நாடுகளின் நிலையைப் பொறுத்தவரை, சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

மலேசியா 83 புள்ளிகளைப் பதிவு செய்து 180 நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

மேலும், கருத்து தெரிவித்த அசாம், தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அமைப்பதன் மூலம், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் நாட்டின் சிபிஐ நிலையை மேம்படுத்துவதற்கான சிறந்த வழி குறித்து விவாதிக்கும் என்றார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset