நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளம், நிலச்சரிவு நிகழ்வால் நேபாளத்திற்கான பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து

கோலாலம்பூர்:

நேப்பாளத்தில் பெய்து வரும்  தொடர் மழையால்  வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுத் தொடர்பு வலையமைப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டிற்கான பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்கள்  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி  முதல் பெய்து வரும்  தொடர் மழை காரணமாக நாடு முழுவதும் பல நெடுஞ்சாலைகள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாக நேபாளத் தலைநகர் காட்மாண்டுவிலுள்ள மலேசியத் தூதரக அதிகாரி முஹம்மத் பிர்டாவுஸ் அஸ்மான் கூறினார்.

இன்று முதல் இந்த வெள்ளிக்கிழமை வரை மழை தொடரும் என நேப்பாளத்தின் நீரியல் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

காட்மாண்டுவிலிருந்து வெளியேறும் அனைத்து வழிகளும் தற்போதைக்குத் துண்டிக்கப்பட்டுள்ளதால் மலேசியர்கள் தங்கள் பயணத்தை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்குமாறு மலேசியத் தூதரகம் தெரிவித்தது. 

அவர்கள் காட்மாண்டு நகருக்கு வந்தால்  துண்டிக்கப்பட்ட சாலைகளால் அவர்கள் எங்கும் செல்ல முடியாமல் சிக்கித் தவிப்பார்கள். 

மேலும், நீர் மட்டம் இன்னும் அதிகமாக உள்ளதோடு காட்மாண்டுவை இணைக்கும் பாலமும் முற்றாக அழிந்து விட்டது.

இதன் அடிப்படையில் அதிகாரிகள் அப்பகுதி பாதுகாப்பானது என  அறிவிக்கும் வரை மற்றும் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படும் வரை நேபாளத்திற்கான பயணத்தை தற்போதைக்கு ஒத்திவைக்க அனைவருக்கும் அறிவுறுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

நேபாளத்தில் உள்ள மலேசியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் அதே வேளையில் அவசர வேளைகளில் தூதரகத்தை தொடர்பு கொள்ளும்படி அவர் வலியுறுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset