நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா, தென் கொரியா இடையிலான தகவல் தொழிநுட்பத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தப்படும்: ஃபஹ்மி ஃபாட்சில் 

சியோல்: 

மலேசியா, தென் கொரியா இடையிலான தகவல் தொழிநுட்பத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார். 

2019-ஆம் ஆண்டில் மலேசியா, தென் கொரியா இடையில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்த புரிந்துணர்வு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

தகவல் தொழிநுட்பத்தை நவம்பர் மாதத்திற்குள் மேம்படுத்த மலேசியா மற்றும் தென் கொரியா இலக்கு வைத்துள்ளன.

இன்று GSMA M360 APAC 2024 மாநாட்டில் தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil மற்றும் தென் கொரியாவின் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் Yoo Sang-im ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின் போது இது குறித்து விவாதிக்கப்பட்டது. 

முன்மொழியப்பட்ட மேம்பாடுகளில் செயற்கை நுண்ணறிவின் ஒருங்கிணைப்பு அடங்கும் என்று ஃபஹ்மி கூறினார்.
கடந்த ஜூலை மாதம் அமைச்சராக நியமிக்கப்பட்ட யூவுடனான ஃபஹ்மியின் முதல் சந்திப்பு இதுவாகும்.

ஃபஹ்மி தென் கொரியாவிற்கு மூன்று நாள் அலுவலப் பயணமாகச் சென்றுள்ளார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset