நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை தாக்கும் முயற்சியில் ஈடுப்பட்ட வூல்ஃப் பேக் கும்பலின் முன்னாள் தலைவருக்கு 10 ஆண்டுகள் சிறை

கோலாலம்பூர்:

சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை தாக்கும் முயற்சியில் ஈடுப்பட்ட வூல்ஃப் பேக் கும்பலின் முன்னாள் தலைவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சுபாங் ஜெயாவில் உள்ள சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு எதிராக கும்பல் ஒன்று தாக்குதல் நடவடிக்கையில் ஈடுப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பில் வூல்ஃப் பேக் கும்பலின் முன்னாள் தலைவர் மஹாடி மாமாட் கைது செய்யப்பட்டு அவர் மீதான வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தது.

39 வயதான அவர் மீது 8 குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி டத்தோ நோரின் பஹாருடின் சம்பந்தப்பட்ட ஆடவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.

மஹாடி மாமாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் தரப்பினர், அரசுத் தரப்பு வழக்கின் முடிவில், 

அந்த நபர் எதிர்கொண்ட எட்டு வழக்குகளில் நியாயமான சந்தேகத்தை எழுப்பத் தவறியதைக் கண்டறிந்த பிறகு  நீதிபதி இத்தீர்ப்பை அறிவித்தார்.

அதே வேளையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மனநல கோளாறு இருப்பது கண்டறியப்பட்டாலும், அவர் சட்டத்தின் அடிப்படையில் நியாயமான விளக்கம் அல்லது காரணங்களை வழங்க தவறிவிட்டார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றத்தைச் செய்தபோது அவர் மனநலம் சரியாக இ

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset