நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வசதிகுறைந்த மாணவர்களுக்கு மலேசிய சபா பல்கலைக்கழகம் உதவியது

கோத்தா கினாபாலு: 

ஒரு நெகிழிப் பையின் மூலம் தனது பொருட்களைக் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வந்த வசதி குறைந்த மாணவருக்கு  மலேசிய சபா பல்கலைக்கழகம் உதவி செய்துள்ளது. 

பாதிக்கப்பட்ட மாணவருக்கும் உதவி தேவைப்படும் மற்ற மாணவர்களுக்கும் உதவுமாறு மாணவர் நலன் மற்றும் நிதிப் பிரிவு, யுஎம்எஸ் மாணவர் விவகாரத்துறைக்குத் தெரிவித்துள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் காசிம் மன்சோர் கூறினார். 

இந்த நடவடிக்கை அவர்கள் தங்கள் படிப்பை நன்றாகப் பின்பற்றுவதையும், B40 குழுவிலிருந்து குறைந்த திறன் கொண்ட மாணவர்களுக்கு ஊக்கத்தையும்அளிப்பதை உறுதிசெய்வதாகும் என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் இங்கே பகிர்ந்து கொண்டார்.

நேற்று மலேசிய சபா பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்கள் சேர்க்கையின் போது மாணவி ரஃபிடாவும் அவரது தந்தையும் சண்டாகானிலிருந்து இருந்து பேருந்தில் பிளாஸ்டிக் பையில் இருந்து சாமான்களை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

2024/2025 அமர்வுக்கு  மலேசிய சபா பல்கலைக்கழகத்தில்  பல்வேறு துறைகளில் படிக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட 4,545 புதிய மாணவர்களில் ரஃபிடாவும் ஒருவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset