நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடாவில் வெள்ளப் பேரிடர் பாதிப்பு தொடர்கிறது: பாலிங்கில் புதியதாக 4 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன

கோலாலம்பூர்:

கனமழையைத் தொடர்ந்து கெடா மாநிலத்தில் வெள்ளப் பேரிடர் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் பாலிங்கில் புதியதாக 4 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

பாலிங் மாவட்டத்தில் உள்ள 62 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வீடுகள் வெள்ளத்தால் மூழ்கியதால் அவர்கள் தற்போது வெள்ள நிவாரண மையங்களில் பாதுகாப்பாகத் தங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை காலை 8 மணி நிலவரப்படி  1,374 பேராக பதிவானது.

நான்கு மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள 14 நிவாரண மையங்களில் 458 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset