நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

73 வயதான ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. 

இதனை தொடர்ந்து கூலி என்ற படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயிறு தொடர்பான பிரச்சினை, இருதய மருத்துவரிடம் சோதனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்துக்கு மருத்துவமனையில் சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது வழக்கமான பரிசோதனை என லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset