நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பூமியைச் சுற்றிவரும் இரண்டாவது நிலா: 2 மாதங்களுக்கு தெரியும்

லண்டன்:

பூமிக்கு 2 மாதங்களுக்கு மட்டும் ஒரு தற்காலிக நிலா தெரியும் என்று நாசா அறிவித்துள்ளது.

இது உலகளாவிய மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பூமியை சுற்றி வரும் ஒரு இயற்கை சாட்டிலைட் தான் நிலா. தற்போது அதேபோல ஒரு விண்கல், பூமியை சிறிது காலம் சுற்றிவிட்டு செல்லவிருக்கிறது. 

இந்த நிகழ்வு நடக்கப்போகிறதென்று, நாசா உதவி பெறும் விண்கல் நிலப்பரப்பு-தாக்கம் கடைசி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விண்கல் குறித்து கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாசா கண்டறிந்தது. 

33 அடி விட்டம் கொண்ட இந்த விண்கல், இன்று முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரை பூமியை சுற்றிவர உள்ளது. 

55 நாட்கள் சுற்றி வரும் இந்த விண்கல்லுக்கு, ‘2024 பிடி5’ என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த விண்கல் பூமியை முழுவதும் சுற்றாது என்றும், ஒரு வில் வடிவத்தில் மட்டும் பூமியை சுற்றிவிட்டு, பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து வெளியேறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset