நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் சாமிவேலு கிண்ண கால்பந்துப் போட்டியில் சிகாம்புட் தமிழ்ப்பள்ளி சாம்பியன்

கோலாம்பூர்:

துன் சாமிவேலு கிண்ண கால்பந்துப் போட்டியில் சிகாம்புட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

கூட்டரசுப் பிரதேச மஇகாவினர் எம்ஐஇடி, தேசிய மஇகா விளையாட்டுப் பிரிவினருடன் இணைந்து இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர்.

கூட்டரசுப் பிரதேசத்தைச் சேர்ந்த 17 தமிழ்ப்பள்ளி அணிகள் இப் போட்டியில் கலந்து கொண்டன.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ சரவணன் இப்போட்டியை தொடக்கி வைத்தார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியுடன் விளையாட்டுத் துறையிலும் சாதிக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் மஇகா இதுபோன்ற போட்டிகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.

இதன் மூலம் மாணவர்கள் தங்களில் ஆற்றலையும் வெளிப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.

இக்கால்பந்தும் போட்டியில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய சிகாம்புட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் நிலையில் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு துன் சாமிவேலு கிண்ணமும் 2 ஆயிரம் ரிங்கிட்டும் பரிசாக வழங்கப்பட்டது.

கம்போங் பாண்டான், புக்கிட் ஜாலில், தம்புசாமி பிள்ளை ஆகிய தமிழ்ப்பள்ளிகள் போட்டியில் அடுத்ததடுத்த நிலையில் வெற்றி பெற்றன.

இதை தவிர்த்து சிறந்த ஆட்டக்காரர்கள், அதிகம் கோல் அடித்தவர், சிறந்த கோல் காவலர் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கூட்டரசுப் பிரதேச மஇகா தலைவர் டத்தோ ராஜா சைமன் பரிசுகளை எடுத்து வழங்கி சிறப்பித்தார்.

இப்போட்டியில் அனைத்து ஆட்டக்காரர்களும் முழு திறனை வெளிப்படுத்தினர்.

இம்மாணவர்கள் நிச்சயம் வரும் காலத்தில் விளையாட்டுத் துறையில் சாதிப்பார்கள் என்று டத்தோ ராஜா சைமன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset