நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகைப்பிடித்தல், புகைப் பிடிக்கும் பொருட்களுக்கான கட்டுப்பாட்டுச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது

புத்ராஜெயா:

புகைப்பிடித்தல், புகைப் பிடிக்கும் பொருட்களுக்கான கட்டுப்பாட்டுச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்துள்ளது.

பொது சுகாதாரத்திற்கான புகைபிடித்தல் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் 2024 (சட்டம் 852) இன்று அமலுக்கு வருகிறது.

புகைப்பிடிக்கும் பொருட்களை விற்பனை செய்தல், பேக்கேஜிங் செய்தல், லேபளிங் செய்தல் , பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கான தடை ஆகியவை இதில் அடங்கும்.

அமல்படுத்தப்படும் விதிகள், உத்தரவுகளில் மின் சிகரெட்டுகள் அடங்கும்.

இந்த சட்டம் கடந்த பிப்ரவரியில் மக்களவையில் அங்கீகாரம் செய்யப்பட்டது.

முதலில் ஜூன் மாதம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஆகஸ்ட் மாதம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் அச் சட்டம் இன்று அமலுக்கு வருகிறது என்று சுகாதார அமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset