நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீவிரவாதிகளைச் சமாளிக்க மலேசியாவுக்குக் கடுமையான சட்டங்கள் தேவை: பிரதமர் அன்வார்

புத்ராஜெயா: 

பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுப்படும் தீவிரவாதிகளைக் கையாள்வதற்கும் தடுப்பதற்குமான பாதுகாப்புச் சட்டம் மலேசியாவுக்கு அவசியம் என்று பிரதமர் 
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

மக்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இது போன்ற சட்டங்களை அமல்படுத்தவில்லை என்று பிரதமர் விளக்கினார். 

மேலும், தீவிர மதவெறி கோட்பாடு உட்பட வன்முறையின் எந்தவொரு கூறுகளும் நாட்டில் பரவாமல் தடுப்பது முக்கியம் என்று அவர் கூறினார்.

வெளிப்புற கூறுகள் மற்றும் தாக்கங்களிலிருந்து உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய பாதுகாப்புச் சட்டம் தேவை என்று தாம் நம்புவதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டினார். 

நாட்டின் சட்டத்தில் இன்னும் போதுமான வலிமை இல்லாத, சேர்க்கப்பட வேண்டிய கூறுகள் இருந்தால், அதை காவல்துறை, இராணுவம் மற்றும் பிற அமலாக்க அமைப்புகளின் விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன் என்று அவர் கூறினார்.

தீவிரவாதத்தைத் தடுப்பதற்கும் எதிர்ப்பதற்கும் (MyPCVE) மலேசிய செயல் திட்டத்தின் தொடக்க விழாவில் அவர் இவ்வாறு உரையாற்றினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset