நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய மாணவர்களின் வெற்றிக்கு அதிகமான பயிற்சிகள் உறுதுணையாக இருக்கும்: சசிதரன்

காஜாங்:

இந்திய மாணவர்கள் அதிகமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இப்பயிற்சிகள் அவர்களின் எதிர்கால வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என சிலாங்கூர் மாநில மஇகாவின் தலைமை செயலாளர் எம். சசிதரன் இதனை வலியுறுத்தினார்.

இந்திய மாணவர்கள் சிறு வயது முதல் பல இலக்குடன் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த இலக்கை அடைவதற்கு அவர் கல்வியை முறையாக படிப்பதுடன் அதிகமான பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பயிற்சிகள்  வாயிலாக தான் மாணவர்கள் தங்களின் திறனையும் அறிவாற்றலையும் பெருக்கி கொள்ளலாம்.

அதே வேளையில் இப்பயிற்சிகள் அவர்களில் கல்வி, தொழில், வர்த்தகம் என அனைத்தும் உறுதுணையாக இருக்கும். 

குறிப்பாக இது தொடர்பான முடிவுகள் எடுக்கவும் வழிக்காட்டலாக இருக்கும்.

எஸ்பிஎம் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கை தொடக்கி வைத்த சசிதரன் இதனை கூறினார்.

உலு லங்காட் மஇகா, தாமான் ஶ்ரீ  டெலிமா, சுங்கை கந்தான் மஇகா கிளைகள் ஏற்பாட்டில் இக் கருத்தரங்கு நடைபெற்றது.

கிட்டத்தட்ட 88 மாணவர்கள் இக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

மஇகா உதவித் தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன் இக் கருத்தரங்கை நிறைவு செய்து சிறப்பித்தார்.

சிலாங்கூர் மாநில மஇகா தலைவர் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார், குகனேஸ், தனேந்திரன் ஆகியோரின் ஆலோசனை ஆதரவுடன் இக் கல்வி கருத்தரங்கு நடைபெற்றது.

மேலும் உலு லங்காட் தொகுதி ம இ கா தலைவர் ராசசெல்வன் ஏற்பாட்டில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset