நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பிரதமர் துறைக்கான ஒதுக்கீடு குறைக்கப்படலாம்: ஜலிஹா முஸ்தஃபா 

லாபுவான்: 

2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பிரதமர் துறைக்கான ஒதுக்கீடு குறைக்கப்படலாம் என்று பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தஃபா தெரிவித்தார்.

அனாவசியச் செலவுகளைக் குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்படாலம் என்று அவர் குறிப்பிட்டார். 

இருப்பினும், சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் சமரசம் செய்யப்படாது என்று அவர் உறுதியளித்தார்.

2025-ஆம் ஆண்டில் சமூகப் பொருளாதார திட்டங்களை செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக பிரதமர் துறை  முன்னுரிமைகள் பட்டியலை நிதியமைச்சகத்திடன் சமர்ப்பித்துள்ளது என்று அவர் கூறினார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை, குறிப்பாக லாபுவானை ஈர்ப்பதற்காக அரசாங்கத்தின் நெகிழ்வான மற்றும் வணிக நட்புக் கொள்கையை வலியுறுத்தினார்.

லாபுவானில் வர்த்தக வாய்ப்புகளை ஆராய்வதில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்களைச் சந்திக்க அடுத்த வாரம் சீனாவுக்குச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset