நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் குற்றமற்றவர் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: ஆசிரியர் ரீத்தா நடராஜா

சிலிம் ரிவர்:

சிலிம் ரிவரில் அமைந்துள்ள தனியார் கிளினிக்கினுள் அத்துமீறி நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தமிழ்ப்பள்ளி ஆசிரியை ரீத்தா நடராஜா, "நான் குற்றமற்றவர் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்" என்று உறுதியுடன் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 3-ஆம் தேதி ரீத்தா சிலிம் ரிவரில் உள்ள அந்தக் கிளினிக்கினுள் அத்துமீறி நுழைந்ததோடு, அங்கு வந்த நோயாளிகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றவியல் சட்டம் 447 இன்படி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 

ரீத்தா நடராஜா இக்குற்றத்தை நிராகரித்து விசாரணைக் கோரினார்.  இதனிடையே மஜிஸ்திரேட் புல்ராணி கவுர் குர்சரன் சிங் வழக்கை அக்டோபர் 18ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளார். 

தற்போது அவர் 2000 மலேசிய ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையோ அல்லது 3000 மலேசிய ரிங்கிட் அபராதமோ விதிக்கப்படலாம்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset