நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சக ஊழியர் கொலை: பாதுகாவலர் மீது குற்றச்சாட்டு

கோலா சிலாங்கூர்: 

இரு வாரங்களுக்கு முன், தன்னுடன் பணிப்புரிந்த சக ஊழியரைக் கொலை செய்தது தொடர்பாக பாதுகாவலர் மீது இன்று கோலா சிலாங்கூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. 

26 வயதான Wan Shahrizan Wan Kadir மாஜிஸ்திரேட் Siti Hajar Ali குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் குற்றச்சாட்டு வாசித்தப் பிறகு அவர் தலையசைத்தார்.

குற்றம் சாட்டப்பட்ட Wan Shahrizan Wan Kadir -இடம் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யவில்லை. 

சபாக் பெர்னாம் தமிழ்ப்பள்ளியின் பாதுகாவலர் அறையில் செப்டம்பர் 15-ஆம் தேதி அதிகாலை 2.30 முதல் 4 மணி வரை 43 வயதான  Raja Azman Raja Abdul Tahir-யைக் கொலை செய்ததாக 26 வயதான Wan Shahrizan Wan Kadir மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவருக்கு எதிரான குற்றம் நிருப்பிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது 13-க்கும் குறையாத பிரம்படிகள் வழங்கப்படலாம்.

இந்த வழக்கின் விசாரணையை அரசு துணை வழக்கறிஞர் Mohamad Nor Hakimi Mohamad Rosedin கையாண்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் Mohd Azali Ibrahim ஆஜரானார்.

இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 4-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

முன்னதாக, கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி ஜாலான் பாசிர், தாமன் பெர்டாமா, சபாக் பெர்னாம் பகுதியில் காரின் பின்புறத்தில் ராஜா அஸ்மானின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset