நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணையதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் மனநலம் பாதிக்கபட்டவர்கள்: டிரம்ப் கடும் தாக்கு 

வாஷிங்டன்: 

அமெரிக்காவின் நடப்பு அதிபரான ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மீது தனிமனித ரீதியிலான தாக்குதலை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தொடுத்துள்ளார். 

இருவருமே மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபராகும் வேட்கையில் குடியரசு கட்சி சார்பாக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். 

நடப்பு துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சி சார்பாக அதிபர் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார்.  இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது என்று சொல்லப்படுகிறது 

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset