நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கடன் வாங்கிய நிறுவனங்களை வாங்க SBI முடிவு: காங்கிரஸ் கண்டனம்

புது டெல்லி: 

கடனை திருப்பி செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளைப் பெற்றுக் கொண்டு கடனை சரிக்கட்டப் போவதாக பாரத ஸ்டேட் வங்கி SBI அறிவித்துள்ளதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பதிவில், மகாராஷ்டிரத்தில் செயல்படும் சுப்ரீம் இன்பிராஸ்டெரக்சர் இந்தியா நிறுவனம், எஸ்பிஐ வங்கியில் பல கோடி கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் உள்ளது. இந்தக் கடனில் 93.45 சதவீதத்தை வாராக்கடனாக வங்கி அறிவித்துவிட்டது.

அந்த நிறுவனம் வங்கிக்கு திருப்பி அளிக்க வேண்டிய கடன் தொகைக்கு பதிலாக அந்த நிறுவனத்தின் பங்குகளைப்  பெற்றுக் கடன் நேர் செய்யப்போவதாக எஸ்பிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது மிகவும் தவறானதும் அபாயகரமானதுமான முன்னுதாரணமாகிவிடும்.

இந்த விவகாரத்தில் இந்திய ரிசர்வ் வங்கி  தலையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset