நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அமித் ஷாவின் சர்ச்சை விடியோ பதிவை நீக்க எக்ஸ் நிறுவனத்துக்கு பாஜக நெருக்கடி: காங்கிரஸ்

புது டெல்லி:

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மாநிலங்களவை உரை அடங்கிய விடியோ பதிவை நீக்குமாறு எக்ஸ்' நிறுவனத்தை பாஜக தலைமையிலான ஒன்றிய நெருக்கடி அளிப்பதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அம்பேத்கர் பெயரை முழக்கமிடுவதற்கு பதிலாக கடவுளின் பெயரை  உச்சரித்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என அமித் ஷா பேசினார்.

இதற்கு அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் பதவி விலக வேண்டும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில்,  காங்கிரஸ் இணையதள கணக்கில் உள்ள அமித் ஷா உரையின் விடியோ பதிவை நீக்குமாறு பாஜக அரசு கேட்டுக்கொண்டுள்ளது என எக்ஸ் நிறுவனத்திடம் இருந்து காங்கிரஸ் தலைவர்களுக்கு மின்னஞ்சல் வந்துள்ளதாக அக் கட்சி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset