நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

யூடியூபரின் முயற்சியால் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பிய பெண்

புது டெல்லி: 

துபாயில் வேலை வாங்கித் தருவதாக கூறி பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய பெண் ஹமிதா பானு, 22 ஆண்டுகள் கழித்து ஒரு யூடியூபரின் முயற்சியால்  சொந்தங்களிடம் திரும்பியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ஹமிதா பானுவை 2002ஆம் ஆண்டு முகவர் ஒருவர்  துபையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் மாவட்டத்துக்கு அனுப்பியுள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து வெளியேற முடியாமல் அந்நாட்டிலேயே தங்கிவிட்ட ஹமிதா பானு, கராச்சியைச் சேர்ந்த ஒரு பாகிஸ்தானியரை மணந்துள்ளார். அவரும் அண்மையில் கொரோனாவில் இறந்துவிட, வளர்ப்பு மகனுடன் ஹமிதா பானு வசித்து வந்தார்.

2022இல் யூடியூபரான வலியுல்லா மரூஃப், ஹமிதா பானு குறித்த விடியோ செய்தியை சமூக ஊடகத்தில் பதிவேற்றினார்.

இதைப் பார்த்து இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினர் ஹமிதா பானுவுடன் தொடர்பு கொண்டனர். பின்னர் வாகா எல்லை வழியாக அவர் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset