நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பள்ளிவாசல் - கோயில் மோதலை ஹிந்துத்துவா தலைவர்கள் கிளப்புவது ஏற்கமுடியாது: மோகன் பகவத்

புது டெல்லி:

அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டியதைத் தொடர்ந்து, அதேபோல் பிற பகுதிகளிலும் பள்ளிவாசல்கள் - கோயில்கள் இடையே மோதலை ஹிந்துத்துவா தலைவர்கள் கிளப்புவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.

ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸின் இந்தக் கருத்துக்கு ஒன்றிய அரசு சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

மோகன் பகவத் நிகழ்ச்சியில் பேசுகையில், இந்தியர்கள் சமூக நல்லிணக்கத்தோடு பல ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகிறோம். இதை உலகளவில் கொண்டுசேர்க்க வேண்டும்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதைப்போல் பிற பகுதிகளில் பள்ளிவாசல்கள் அமைந்துள்ள இடங்களில் கோயில்கள் இருந்ததாகக்கூறி சிலர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

இந்த விவகாரங்களை கிளப்பி ஹிந்துத்துவா தலைவர்களாக மாற சிலர் முயற்சிக்கின்றனர். இதை ஏற்க முடியாது என்றார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புதான் இதுபோன்று பிரச்சினைகளை கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset