நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக-காங்கிரஸ் எம்பிக்கள் தள்ளு முள்ளு

புது டெல்லி:

அம்பேத்கரை அமித் ஷா அவமதித்தற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமித் ஷாவின் பேச்சை திரித்து கூறுவதாக காங்கிரஸை கண்டித்தும் பாஜக எம்பிக்கள் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் எம்பிக்களை தள்ளிவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பாஜக எம்.பி.க்கள் தள்ளியதில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைரும் காங்கிரஸ் தேசியத் தலைவருமான 82 வயது மல்லிகார்ஜுன கார்கே நிலைதடுமாறி தரையில் அமர்ந்ததாக தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் தள்ளியதில் பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் நாடாளுமன்ற வளாகம் போர்க்களம்போல் காட்சி அளித்தது.  இந்தக் கைகலப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி.க்கள் தரப்பிலும், மல்லிகார்ஜுன கார்கேயை தாக்கியதாக பாஜக எம்.பி.க்கள் மீது காங்கிரஸ் தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தள்ளுமுள்ளு தொடர்பாக பாஜக அளித்த புகாரின்பேரில் ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக புகார் அளித்திருந்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset