நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மின்சாரம் திருடியதாக சம்பல் எம்பிக்கு ரூ.1.91 கோடி அபராதம் விதித்த உ.பி. அரசு

புது டெல்லி:

மின் திருட்டில் ஈடுபட்டதாக சமாஜவாதி கட்சியின் சம்பல் தொகுதி எம்.பி. ஜியாவுர் ரஹ்மானுக்கு உத்தர பிரதேச மின்சாரத் துறை ரூ. 1.91 கோடி அபராதம் விதித்தது. அவரது வீட்டின் மின் இணைப்பையும் துண்டித்தது.

சம்பல் பகுதியில் உள்ள முகலாய காலத்து ஷாஹி ஜாமா பள்ளிவாசல் கோயிலை இடித்து கட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த மாதம் நடைபெற்ற ஆய்வு பணியின் போது வன்முறை வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். இதில் ஜியாவுர் ரஹ்மான் உள்ளிட்டோர் மீது போலீஸார்  வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஜியாவுர் ரஹ்மான் தனது வீட்டில் மின் திருட்டில் ஈடுபட்டதாக கூறி மின்சாரத் துறை ரூ. 1.91 கோடி அபராதம் விதித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset