நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

குவைத்துக்கு புறப்பட்டார் மோடி

புது டெல்லி:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக குவைத்துக்கு புறப்பட்டார்.
குவைத் மன்னர் ஷேக் அல் அகமது அல் ஜாபர் அல் ஷபா அழைப்பை ஏற்று சென்றார்.

1981இல் இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி குவைத் சென்றார். அதன் பிறகு இப்போதுதான் இந்திய பிரதமர் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்தப் பயணத்தில் வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குவைத்துக்கான இந்தியாவின் ஏற்றுமதி அண்மையில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற புதிய உச்சத்தை எட்டியது. குவைத் இந்தியாவில் 10 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset