செய்திகள் இந்தியா
மும்பையில் சோகம்: சுற்றுலா படகு மீது, கடற்படையின் அதிவேக ரோந்து படகு மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்
மும்பை:
மும்பை கடற்கரை பகுதியில் சுற்றுலா படகு மீது, கடற்படையின் அதிவேக ரோந்து படகு ஒன்று மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அங்கு தேடும் பணியில் கடற்படையும் கடலோர காவல் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
மும்பை அருகேயுள்ள எலிபென்டா தீவில் புகழ்பெற்ற கர்பரி குகைகள் உள்ளன. இதை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் மும்பை கடற்கரையிலிருந்து படகுகளில் செல்வது வழக்கம். சுற்றுலா பயணிகள் 100-க்கும் மேற்பட்டோருடன், நீல்கமல் என்ற படகு மும்பையின் கேட்வே ஆப் இந்தியா பகுதியிலிருந்து எலிபென்டா தீவு நோக்கி நேற்று மாலை புறப்பட்டது.
அப்போது அந்த வழியாக கடற்படையின் ரோந்து படகு சென்றது. அந்த படகு நேற்று மாலை 3.55 மணியளவில், கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது அதிவேகத்தில் மோதியது. இதில் பயணிகள் படகு பலத்த சேதம் அடைந்து, ஒரு பக்கமாக சாய்ந்தது. இதனால் படகில் இருந்த பயணிகள் சிலர் கடலில் விழுந்தனர்.
இத்தகவல் அறிந்ததும் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் படகுகளில் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் விழுந்த 13 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். படகில் சென்ற பயணிகள் 101 பேர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர். காயம் அடைந்தவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டனர்.
மீட்பு பணி குறித்து இந்திய கடலோ காவல் படை ஐஜி பிஷம் சர்மா கூறுகையில், “மும்பை கடல் பகுதியில் கடலோர காவல் படை மற்றும் கடற்படை இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. எங்களது கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன” என்றார்.
இந்த விபத்து குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “எலிபென்டா தீவுக்கு சுற்றுலா பயணிகளுடன் சென்ற நீல்கமல் என்ற படகு மீது கடற்படையின் அதிவேக ரோந்து படகு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணியில் கடற்படை மற்றும் கடலோ காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணைய தலைவர் உன்மேஷ் வக் அளித்த பேட்டியில், ‘‘எங்கள் துறைமுகத்துக்கு சொந்தமான பைலட் படகு விபத்து நடந்த இடத்தை நேற்று மாலை கடந்து சென்றது. அந்த படகு மூலம் 40 பேர் மீட்கப்பட்டு துறைமுக ஆணைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்’’ என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 21, 2024, 4:34 pm
மின்சாரம் திருடியதாக சம்பல் எம்பிக்கு ரூ.1.91 கோடி அபராதம் விதித்த உ.பி. அரசு
December 21, 2024, 4:22 pm
குவைத்துக்கு புறப்பட்டார் மோடி
December 21, 2024, 4:15 pm
பள்ளிவாசல் - கோயில் மோதலை ஹிந்துத்துவா தலைவர்கள் கிளப்புவது ஏற்கமுடியாது: மோகன் பகவத்
December 21, 2024, 3:28 pm
ராஜஸ்தானில் எரிவாயு லாரி வெடித்து சிதறி 11 பேர் பலி
December 20, 2024, 8:00 pm
அமித் ஷாவின் சர்ச்சை விடியோ பதிவை நீக்க எக்ஸ் நிறுவனத்துக்கு பாஜக நெருக்கடி: காங்கிரஸ்
December 20, 2024, 5:23 pm
பெண் அமைச்சரை தகாத வார்த்தைகளில் திட்டிய பாஜக எம்எல்சி கைது
December 20, 2024, 4:44 pm
நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக-காங்கிரஸ் எம்பிக்கள் தள்ளு முள்ளு
December 19, 2024, 3:24 pm
அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித் ஷா பதவி விலக எதிர்க்கட்சிகள் போராட்டம்
December 18, 2024, 10:27 pm