நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித் ஷா பதவி விலக எதிர்க்கட்சிகள் போராட்டம்

புது டெல்லி:

அம்பேத்கரை அவமதிக்கும் ருத்தை தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அம்பேத்கர் புகைப்படுத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் போாராட்டம் நடத்தினர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, நாட்டுக்கு வழிகாட்டுதலை அளித்த அம்பேத்கரை அவமதிப்பதை, நாடு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. இதற்கு அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்று பாஜகவினர் கூறினர். அம்பேத்கரின் பங்களிப்பையும், அரசமைப்புச் சட்டத்தையும் ஒழிப்பதே அவர்களின் முழுநேரப் பணி என்றார்.

அமித் ஷா தானாக அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யவில்லை எனில், அவரை பிரதமர் நரேந்திர மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset