நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மலையாள நடிகர் முகேஷ் கைது: ஜாமீனில் விடுவிப்பு

கொச்சி:

நடிகை அளித்த பாலியல் புகாரில் சிபிஎம் எம்எல்ஏவும் நடிகருமான எம்.முகேஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் பெற்றிருந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார்.

2017இல் மலையாள திரையுலக பாலியல் புகார்களை விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவை கேரள அரசு அமைத்தது.

இக் குழு அளித்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எம்எல்ஏ முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை குற்றத்தும் இரு புகார்கள் பதிவாகின. 

சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜாரான முகேஷிடம் மூன்றரை மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தி பின்னர் கைது செய்தனர்.

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி முகேஷ் முன்ஜாமீன் பெற்றிருந்ததால், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset