நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலேசியாவில் உதித் நாராயணின் இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது

பெட்டாலிங் ஜெயா:

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒடியா, நேபாளி, போஜ்புரி, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல பாடல்களைப் பாடியப் பிரபல பின்னனி பாடகர் உதித் நாராயண் தனது குரலால் 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, மலேசிய ரசிகர்களை மகிழ்விக்கப் போகிறார்.

Udit Narayan Live in Kuala Lumpur, இசை நிகழ்ச்சி டிசம்பர் 28-ஆம் தேதி மேகா ஸ்டார் அரேனா, சுங்கை வாங் பிளாசாவில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி மாலை மணி 7 மணிக்குத் தொடங்கும் என்பதை ஏற்பாட்டுக் குழு உறுதிப்படுத்தியது. 

இந்நிகழ்ச்சியை  VVST and First Pictures நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

 இதன் உரிமையாளர் சூல் கமரூல் இந்த நிகழ்ச்சியை மலேசிய ரசிகர்களுக்கு வழங்குவதை பெருமையாகக் கூறியுள்ளார்.

உதித் நாராயணன், குறிப்பாக இந்திப் படங்களின் பாடல்களுக்காக புகழ் பெற்றவர். இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான பாடல்கள் இந்தியில்தான் இருக்கும். 

இருப்பினும், தமிழ் ரசிகர்களுக்காக 4 தமிழ்ப் பாடல்களையும் அவர் பாடப் போகிறார். 

இது மலேசியாவின் தமிழ் ரசிகர்களுக்கு மிகப் பெரும் உற்சாகத்தை அளிக்கும். உதித் அவருடைய பிரபலமான தமிழ் ஹிட்ஸ், பாடல்களைப் பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாபெரும் இசைநிகழ்ச்சில் உதித் நாராயணுடன் இன்னும் சில பிரபலப் பாடகர்களும் இணையவுள்ளனர். 

மலேசியர்கள் பல ஆண்டுகளாக உதித் அவரை நேரில் காண காத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் எனச் சூல் கமரூல் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset