நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பினாங்கில் இந்தியர் நடனத் திருவிழா நிகழ்ச்சி: செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது 

ஜார்ஜ்டவுன்: 

பினாங்கு மாநில இந்தியத் திரைப்படச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருகின்ற 27.09.2024 மாலை மணி 5.00 முதல் இரவு மணி 11.00 வரை Auditorium A KOMTAR பினாங்கில், இந்தியர் நடனத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த இத்தியர் நடனத் திருவிழாவில், இந்தியர்களின் பாரம்பரிய நடனங்கள் பற்பல படைக்கப் படுகின்றன.

இந்த விழாவுக்கு, பினாங்கு அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு மேதகு சுந்தரராஜூ அவர்களும் மற்றும் சிங்கப்பூர் தொழில் அதிபரும் நன்கொடை நெஞ்சருமாகிய திரு.சின்னையா நாயுடு மற்றும் திருமதி.ஜோபினா நாயுடு அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகவும், மேலும் பல பெருந்தகையினரும் கலந்து கொள்கின்றனர்.

மேலும், இந்த இந்தியர் நடனத் திருவிழா நிகழ்ச்சி ஓர் இலவச நிகழ்வாக நடைபெறுவதால், பொது மக்கள் இந்த விழாவில் திரளாக அதிகமாகக் கலந்து கொண்டு பேரதரவு தரும்படி அழைக்கப் படுகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset