நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,500 ஆக உயர்ந்துள்ளது

அலோர் ஸ்டார்: 

இன்று காலை கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மேலும் பெர்லிஸ், சிலாங்கூர், பேராக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை. 

கெடாவில் இன்று காலை 8 மணி நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7494 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலச் சமூக நலத்துறையின் கூற்றுப்படி, 2,445 பேர் ஆறு மாவட்டங்களில் உள்ள 42 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கெடாவிலுள்ள ஐந்து ஆறுகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக நீர்ப்பாசனம், வடிகால் துறை தெரிவித்துள்ளது.

பினாங்கில், நேற்றிரவு 427 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த எண்ணிக்கை இன்று காலை 259 ஆகக் குறைந்துள்ளது.

சிலாங்கூரில், 36 குடும்பங்களைச் சேர்ந்த 101 பேர் இன்னும் கோலா சிலாங்கூரில் உள்ள தஞ்சோங் கராங் விவசாயிகள் மேலாண்மை நிறுவனத்தில் உள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெர்லிஸில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாறாமல் உள்ளது.

90 பேர் கங்கார், அராவ் ஆகிய இடங்களில் உள்ள மூன்று நிவாரண மையங்களிலும், பேராக்கில், 16 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாகன் செராயில் உள்ள எஸ்.கே.சங்கட் லோபக்கில் உள்ள நிவாரண மையத்திலும் உள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset